தமிழகத்திற்கு அலர்ட்: 8 மாவட்டங்களில் கனமழை!

 
rain

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தவாறே தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் மழை குறித்த எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 

மேலும் சென்னையை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 9ஆம் தேதி நாளை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 9 முதல் 12 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

From around the web