தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதே மாரடைப்பில் மரணம் அடைந்த அதிமுக எம்பி!

 

தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அதிமுக எம்பி ஒருவர் திடீரென மாரடைப்பில் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான். இவர் இன்று வாலாஜா பகுதியில் உள்ள அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 

moh john

அதிமுக எம்பி எம்பி முகமது ஜான் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோதே மரணமடைந்தது அதிமுக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் முகமது ஜான் எம்பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

திமுக எம்பி முகமது ஜான் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், ஆழ்ந்த இரங்கல். மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அதிமுகவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் 

From around the web