சசிகலா காரில் அதிமுக கொடி சட்டவிரோதம்: அமைச்சர் ஜெயகுமார்

சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி இருப்பது சட்டவிரோதம் என்றும் இதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கொண்ட காரில் பயணம் செய்தது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்றும் அதனால் அவர் அதிமுக கொடி ஏற்றிய காரில் பயணம் செய்வது தவறு இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவர் எப்படி இந்த கட்சி கொடியை பயன்படுத்த முடியும் என்றும் இது சட்டவிரோதம் என்றும் கூறினார். மேலும் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அதிமுகவிலிருந்து வேறு இடங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.