அதிமுக முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் உறுப்பினர்கள் அறிவிப்பு! பரபரப்பு தகவல்

 

கடந்த சில வாரங்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை நடந்து வந்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இதில் யார் முதல்வர் வேட்பாளர் என்று சர்ச்சைக்கு சற்றுமுன் முடிவு கிடைத்துள்ளது 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முடிவு ஏற்பட்டு உள்ளது 

மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்படனர். அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இவர்கள் தான்;

1.  திண்டுக்கல் சீனிவாசன்
2.  தங்கமணி
3.  எஸ்.பி.வேலுமணி
4.  ஜெயக்குமார்
5.  சி.வி.சண்முகம்
6.  காமராஜ்
7. ஜே.சி.டி.பிரபாகர்
8. மனோஜ் பாண்டியன்
9. பா.மோகன்
10. கோபாலகிருஷ்ணன்
11. மாணிக்கம்

From around the web