மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்: கமல்ஹாசன்

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் இருப்பினும் அனைவரும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி சலுகை உயரவில்லை என்பது ஒரு ஏமாற்றமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

மேலும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் தேர்தல் வர உள்ளதால் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் சலுகைகளை அள்ளி வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்ஜெட் குறித்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர் 

kamal

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த பட்ஜெட் குறித்து கூறிய போது மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவான ஒரு பட்ஜெட் என்றும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒரு பட்ஜெட் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது

From around the web