கமல்ஹாசனை அடுத்து கனிமொழியின் ஆதரவை பெற்ற சென்னை பல்கலை மாணவர்கள்!

குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு சமீபத்தில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டாலும் பல்கலைக்கழக வாசலில் நின்று மாணவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மீண்டும் சென்னை
 
கமல்ஹாசனை அடுத்து கனிமொழியின் ஆதரவை பெற்ற சென்னை பல்கலை மாணவர்கள்!

குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு சமீபத்தில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டாலும் பல்கலைக்கழக வாசலில் நின்று மாணவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மீண்டும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தார் திமுக எம்பி கனிமொழி

சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசனை அடுத்து தற்போது கனிமொழியும் ஆதரவு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web