கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 
coimbatore

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று சுமார் 1500 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முக்கிய உத்தரவு ஒன்றை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளதால் கோவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நகைக் கடைகள், துணிக்கடைகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களிடம் இயங்கலாம் என்றும் 6 மணி முதல் 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி என்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் இயங்கும் என்றும் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்பட அனைத்து சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த கூடுதல் கட்டுப்பாடு குறித்த உத்தரவு கோவை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web