நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பிரச்சாரத்தை தொடர்வாரா?

 

கடந்த 80களில் நவரச நாயகனாக தமிழ் திரையுலகில் வலம் வந்துகொண்டிருந்த நடிகர் கார்த்திக் திரையுலகம் அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் இருந்து வந்தார். அரசியலில் அவர் தனிக்கட்சி ஆரம்பித்தும், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு தேர்தல்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது மனித உரிமை கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து பாஜக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குஷ்பு உள்பட பல பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவரது தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

karthik

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் நேற்று இரவு மூச்சுத்திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்கான தேர்தல் பணிகளில் நேற்று இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் நடிகர் கார்த்திக்’ 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

From around the web