குவியும் பாலியல் புகார்கள்: சர்ச்சையில் திருச்சி கல்லூரி!

 
trichy college

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆரம்பித்த வழக்கு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு கொண்டே வருகிறது 

சமீபத்தில் திருச்சியிலுள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் தமிழ்துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது மாணவிகள் புகார் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அவரது துறையில் பயிலும் 5 மாணவிகள் கடிதம் மூலம் தங்களுக்கு பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் கூறிய பாலியல் புகார் உண்மை தான் எனவும் பேராசிரியர் பால் சந்திரமோகனுக்கு ஆதரவாக பேராசிரியர் நளினி என்பவர் இருந்துள்ளார் என்றும் உறுதிபட தெரிந்து கொண்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் பால் சந்திரமோகனை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது 

திருச்சி பகுதியில் மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான பிஷப் ஹீபர் கல்லூரி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

From around the web