அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி: முதல்வரின் அசத்தல் அறிவிப்புகள்!

 
stalin

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது தவிர்க்கப்படும் என்றும், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 60 ஆக நீட்டிக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிகள் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்

மேலும் அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் "அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மகன், மகள்கள் சேர்க்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த இந்த அடுத்தடுத்து அறிவிப்புகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web