மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சென்னையில் சிறு குழந்தை பலி

எந்த ஊரிலும் இல்லாத கொடூரம் சென்னையில் மட்டும் தொடர்ந்து நடக்கிறது. ஆழ்துளை குழாய் கிணற்றில் குழந்தை விழுந்து இறப்பது ஒரு புறம் என்றால், சென்னை நகரில் குறிப்பிட்ட ஏரியாக்களில் மாஞ்சா நூல் பறக்க விட்டு சிறு குழந்தைகள் அதில் மாட்டி இறப்பது பரிதாபத்துக்குரிய நிகழ்வாக தொடர்ந்து வருகிறது. இந்த மாஞ்சா நூலில் பட்டம் விடுவார்கள் ஒருவருக்கொருவர் பட்டத்தை அறுத்து விளையாடுவதுதான் இந்த விளையாட்டின் விதியாகும். நூல்களை அறுப்பதற்காக அதில் கண்ணாடி, பிளேடு என்று கொடூரமான பொருட்கள் அரைத்து
 

எந்த ஊரிலும் இல்லாத கொடூரம் சென்னையில் மட்டும் தொடர்ந்து நடக்கிறது. ஆழ்துளை குழாய் கிணற்றில் குழந்தை விழுந்து இறப்பது ஒரு புறம் என்றால், சென்னை நகரில் குறிப்பிட்ட ஏரியாக்களில் மாஞ்சா நூல் பறக்க விட்டு சிறு குழந்தைகள் அதில் மாட்டி இறப்பது பரிதாபத்துக்குரிய நிகழ்வாக தொடர்ந்து வருகிறது.

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சென்னையில் சிறு குழந்தை பலி

இந்த மாஞ்சா நூலில் பட்டம் விடுவார்கள் ஒருவருக்கொருவர் பட்டத்தை அறுத்து விளையாடுவதுதான் இந்த விளையாட்டின் விதியாகும். நூல்களை அறுப்பதற்காக அதில் கண்ணாடி, பிளேடு என்று கொடூரமான பொருட்கள் அரைத்து சேர்க்கப்படுகிறது.

இந்த பட்டத்தை நண்பர்கள் விட்டுக்கொள்ளும்போது ஒருவருக்கொருவர் அறுத்து விட்டுக்கொள்ளுகிறார்கள் அதில் அறுந்த பட்டம் எங்காவது பறந்து வந்து சாலையில் செல்லும் சிறு குழந்தைகளை பதம் பார்க்கிறது. இதற்கு முன் தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் ஒருவன் மாஞ்சா நூல் கழுத்து அறுபட்டு இறந்திருக்கிறான்.

நேற்றும் இப்படியாக கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த வட இந்தியரான கோபால் என்பவர் தனது சிறு குழந்தையுடன் தண்டையார் பேட்டை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல் இவரின் குழந்தை அபினேஷ் சரவ்வின் கழுத்தை அறுத்தது.

இதை பார்த்த கோபாலும் அவரது மனைவியும் குழந்தையை பார்த்து துடிதுடித்து போயினர்.உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அபினேஷ் சரவ் துடிதுடித்து இறந்தது.

சென்னையில் தொடரும் மாஞ்சா நூல் படுகொலைகளுக்கு எப்போது தீர்வு வரப்போகிறதோ தெரியவில்லை.

From around the web