எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மொத்தம் 30 பேர்கள்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!


 

 
sbi

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் நூதனமாக கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக அமீர் என்ற கொள்ளையன் பிடிபட்ட நிலையில் நேற்று ஹரியானாவை சேர்ந்த வீரேந்தர் என்பவர் பிடிபட்டார்

இந்த நிலையில் வீரேந்தர் சென்னை அழைத்து வர தமிழக போலீஸ் ஏற்பாடு செய்து வருகிறது வீரேந்தர் இடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் பிளம்பர் வேலை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் தற்போது வீரேந்தர் குடும்பம் பாரம்பரியமாக கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கொள்ளையடித்த பணத்தில் மாளிகை போல் வீடு நிலம் வாங்கி குவித்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது 

இந்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் இரண்டு குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு குழுக்களில் சுமார் 30 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஹரியானா போலீஸ் உதவியுடன் கொள்ளையர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பிடிப்பதில் காவல்துறை தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web