சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ரூ.13 லட்சம் மதிப்பு துணிகள் திருட்டு: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பெரிய கடைகள், மால்கள் திறக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேல் பூட்டப்பட்டிருக்கும் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள துணிகள், பாத்திரங்கள் திருடு போயிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில்
 

சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ரூ.13 லட்சம் மதிப்பு துணிகள் திருட்டு: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பெரிய கடைகள், மால்கள் திறக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேல் பூட்டப்பட்டிருக்கும் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள துணிகள், பாத்திரங்கள் திருடு போயிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் இருந்து கடந்த 14-ம் தேதி சுமார் 13 லட்சம் மதிப்பிலான 20 விலையுயர்ந்த பட்டுப்புடவைகள், 300 பித்தளை பாத்திரங்கள் திருடு போயுள்ளதாக அக்கடையின் மேனேஜர் சுந்தர் ராஜ் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

From around the web