எனது பேச்சு வெட்டியும், ஒட்டியும் திரிக்கப்படுகிறது: ஆ ராசா விளக்கம்

 

எனது பேச்சு வெட்டியும் ஒட்டியும் திரிக்கப்படுகிறது என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா அவர்கள் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். இதனை அடுத்து முதல்வரின் தாயாரை ஆ ராசா அவமதித்துவிட்டதாகவும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. 

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆ ராசா, தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவதூறாக பேசவில்லை என்றும் தனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் திரிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

stalin

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது கட்சியின் பேச்சாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரையில் ’தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் கண்ணியமாக பேசவேண்டும் என்றும் திமுகவினர்களின் பேச்சை வெட்டி ஒட்டி திரிக்கப்படுவதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு முன் வெற்றிக்கான பாதை முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக் குறைவான வார்த்தைகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web