பொதுநல வழக்கால் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திடீர் சிக்கல்!

 

வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளதால் திமுக அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் தங்களுடைய கட்சிகளின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடாமல் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்திலும், போட்டியிடுகின்றன.

symbols

இந்த நிலையில் இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்றை திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை கூட்டணி கட்சிகள் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது என்றும் இது குறித்து நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை கூட்டணி கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

From around the web