9 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிப்பு: இரண்டு மாவட்டங்கள் எவை எவை?

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று மாலை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராணிப்பேட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு
 

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று மாலை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராணிப்பேட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் தேர்வுகளும் ரத்தாகி உள்ளன என்பது தெரிந்ததே

From around the web