ஜனவரி 8ஆம் தேதி விடுமுறை எடுத்தால்? தமிழக அரசு எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

ஜனவரி 8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க கூடாது என்றும் அன்றைய தினம் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஜனவரி 8ஆம் தேதி குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. கேரளா, மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்களில் அன்றைய தினம் அரசு
 
ஜனவரி 8ஆம் தேதி விடுமுறை எடுத்தால்? தமிழக அரசு எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

ஜனவரி 8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க கூடாது என்றும் அன்றைய தினம் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜனவரி 8ஆம் தேதி குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. கேரளா, மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்களில் அன்றைய தினம் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை உள்பட தமிழகத்திலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜனவரி 8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு மட்டும் எடுத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web