தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13191ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் இன்று மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8228ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 987 பேர்
 
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13191ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்று மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8228ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 987 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இன்று தமிழகத்தில் 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web