40 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் பட்டாதாரியான 7 பெண்கள்!

 

40 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து பட்டதாரியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் குறித்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் மனைவி மற்றும் 7 பெண்குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான வீடு ஒன்றில் வாழ்ந்து வந்தார். சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு ஒற்றையடிப்பாதையில் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழலில் அச்சத்துடனேயே மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 

அதே இடத்தில் 30 வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சம்பாதித்து சேர்த்த பணத்தில் சிறிய வீடு ஒன்றை கட்டி குடிபுகுந்த நிலையில் அந்த வீட்டிற்கும் மின் இணைப்பு போஸ்ட்டுக்கும் இடையே உள்ள தொலைவைக் காரணம் காட்டி அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க இயலாது என மின்வாரிய அதிகாரிகள் மறுத்து விட்டதாக தெரிகிறது.

பஞ்சாயத்து அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என மின் இணைப்புக்காக தளராமல் ஏறி இறங்கியும் பயனில்லை. சமீபத்திய புயலின்போது நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் அதுவும் நடைபெறவில்லை 

இந்த நிலையில் தனது நான்கு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் பிரான்ஸிஸ். தனது மனைவி, மனைவியின் தாயார் மற்றும் இளையமகள் மூன்று பேருடன் வசித்து வரும் நிலையில் தற்போது மூன்று மகள்களும் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 

ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் வாழ முடியாத நவீன உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வரும் பிரான்ஸிஸ் வீட்டிற்கு இனிமேலாவது மின்சாரம் கிடைக்க அரசு வழிவகை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web