7 பேர் விடுதலை, ஸ்டாலின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

 
subramaniam swamy

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என்றும் இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர்கள் சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் அதுமட்டுமின்றி ராஜீவ்காந்தி மட்டுமின்றி 18 காவல்துறையினரும் அந்த குண்டு வெடிப்பில் பலியாகி உள்ளார்கள் என்றும் அவர்கள் குடும்பமும் மன்னித்தால் மட்டுமே 7 பேர் விடுதலை செய்ய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 7 பேரின் விடுதலை மீண்டும் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

From around the web