பீலா ராஜேஷ் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

 

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். அவர் தினந்தோறும் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பலியானவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்பதையும் செய்தியாளர்கள் முன் தெரிவித்து வந்தார் 

அவரது தினசரி பேட்டிக்காகவே லட்சக்கணக்கானோர் காத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தகவல் மட்டுமின்றி அவரது உடை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வேறு துறைக்கு மாற்றப்பட்டார் 

beela

இந்த நிலையில் தற்போது பீலா ராஜேஷ் உள்ளிட்ட ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு நிலை உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

From around the web