7 மாவட்ட பள்ளிகள் விடுமுறை, 3 பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிபரங்கள்

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்ற அறிவிப்பு மற்றும் சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று முக்கிய பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைப்பு என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது இதனை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த வகையில் கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள
 

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்ற அறிவிப்பு மற்றும் சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று முக்கிய பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைப்பு என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது

இதனை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த வகையில் கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்தந்த ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

அதேபோல் சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

7 மாவட்ட பள்ளிகள் விடுமுறை, 3 பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிபரங்கள்

மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள் அறிவித்துள்ளனர்

அதேபோல் மின்வாரிய துறையின் கேங்மேன் நேர்முகத்தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் அந்தத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது

From around the web