தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்: இந்த ஆண்டில் அறிமுகம்

 
computer

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தற்போது பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டும் கணினி அறிவியல் பாடங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு முதல் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குரிய புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிடப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் காரணமாக சுமார் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web