உறுதியானது அமமுக-தேமுதிக கூட்டணி: எத்தனை தொகுதிகள்?

 

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக தனித்து விடப்பட்டதாக கருதப்பட்டது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய எந்த கூட்டணியிலும் தேமுதிக சேரவில்லை என்று செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் நேற்று இரவு முதல் அமமுக உடன் மீண்டும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

vijayakanth

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இரு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இன்று மாலை 6 மணிக்கு விஜயகாந்த் 60 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலையும் அறிவிப்பார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து வரும் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக என நான்கு கூட்டணிகள் மோதுகின்றன என்பதும் இது தவிர 234 தொகுதிகளிலும் தனியாக சீமானின் நாம் தமிழர் கட்சியை களத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web