சூர்யாவுக்கு ஆதரவாக குவிந்த 6 நீதிபதிகள்: தலைமை நீதிபதிக்கு கூட்டாக கடிதம்!

 

நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்

சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு ஒரே ஒரு நீதிபதி மட்டுமே கடிதம் எழுதிய நிலையில் தற்போது 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளாணா கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் எழுதிய கடிதத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் வேண்டாம் என்றும் மாணவர்கள் மரணம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியது போல் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் 

சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு நீதிபதி மட்டுமே குரல் எழுப்பிய நிலையில் தற்போது திடீரென 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் சூர்யாவுக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனை அடுத்து சூர்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை நீதிபதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web