5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பாமக அறிவிப்பால் பரபரப்பு

இந்த கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது தெரிந்ததே இந்த தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வந்த நிலையில் திடீரென இந்த தேர்வு ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவும் இது குறித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது
 
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பாமக அறிவிப்பால் பரபரப்பு

இந்த கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது தெரிந்ததே

இந்த தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வந்த நிலையில் திடீரென இந்த தேர்வு ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவும் இது குறித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது என்றும் அதனால் திட்டமிட்டிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளார்

இதனையடுத்து 5,8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்தல் ரத்து குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது

From around the web