கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

 
கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றும் இன்றும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

patients

இதனை அடுத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனால் படுக்கை இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்த நிலையில் தமிழக அரசு சற்றுமுன் பிறப்பித்த உத்தரவில் 50 சதவீத படுக்கைகளை கொரோனாவால் நோயாளிகள் சிகிச்சைக்காக ஒதுக்குமாறு கூறியுள்ளது. மற்ற சிகிச்சைக்கு உள்நோயாளியாக அனுமதிப்பதை தள்ளி வைக்கவும் தமிழக அரசு தனியார் மருத்துவமனைக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web