வாகனங்களுக்கு இனி 5 ஆண்டுகள் காப்பீடு திட்டம்: புதிய உத்தரவு

 
insurance

புதிய வாகனங்கள் வாங்கும் போது இதுவரை ஒரு ஆண்டுக்கு மட்டுமே வாகன காப்பீடு எடுக்கப்பட்ட நிலையில் இனி ஐந்து ஆண்டுகள் காப்பீடு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டப்படி புதிய வாகனங்கள் வாங்கும் போது ஒரு ஆண்டு மட்டுமே காப்பீடு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும் 

ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இனிமேல் வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு திட்டம் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாங்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web