சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு!

 

சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு என்ற தகவல் தி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு நகைகளை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர் 

lalitha jewellery

முதல்கட்ட விசாரணையில் நகை கடை ஊழியர்களே இந்த நகைகளை திருடியதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னையின் மையப்பகுதியில் எப்போதும் பிஸியாக உள்ள திநகரில் உள்ள லலிதா ஜூவல்லரி கடையும் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதும் அதன் பின் முருகன் என்பவரின் கூட்டாளிகள் தான் இந்த கொள்ளையை அடித்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

From around the web