5 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 
rain

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது

தமிழகத்திலுள்ள தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தென் மற்றும் உள் மாவட்டங்கள் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் ஜூலை 4-ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web