பணமதிப்பிழப்பு தெரியாமல் ரூ.46 ஆயிரம் வைத்திருந்த மூதாட்டிகள்: கலெக்டர் செய்த அரிய உதவி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பை அறிவித்தவுடன் இந்தியாவே குலுங்கியது. பல நடுத்தர, ஏழை எளிய மக்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் 1000 ரூபாயை மாற்ற முடியாமல் திணறினார் இந்த நிலையில் பணமதிப்பிழப்பு என்ற ஒன்று என்ற அறிவிப்பையே தெரியாத ஒரு சிலர் செல்லாத 500 ரூபாய், 1000 ரூபாயை வைத்திருந்த கதையும் உண்டு அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 மூதாட்டிகள் ரூபாய் 46
 

பணமதிப்பிழப்பு தெரியாமல் ரூ.46 ஆயிரம் வைத்திருந்த மூதாட்டிகள்: கலெக்டர் செய்த அரிய உதவி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பை அறிவித்தவுடன் இந்தியாவே குலுங்கியது. பல நடுத்தர, ஏழை எளிய மக்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் 1000 ரூபாயை மாற்ற முடியாமல் திணறினார்

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு என்ற ஒன்று என்ற அறிவிப்பையே தெரியாத ஒரு சிலர் செல்லாத 500 ரூபாய், 1000 ரூபாயை வைத்திருந்த கதையும் உண்டு

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 மூதாட்டிகள் ரூபாய் 46 ஆயிரம் பணத்தை தங்களது இறுதி சடங்கிற்காக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த நிலையில் அவர்களுக்கு ரூபாய் ஐநூறு, ஆயிரம் மதிப்பிழந்ததே தெரியாமல் இருந்தது

இந்த நிலையில் சமீபத்தில் தான் அவர்கள் இருவருக்கும் இது குறித்து தெரிய வந்தது உடனே அவர்கள் வங்கிக்கு சென்று அந்த பணத்தை மாற்ற முயன்ற போது வங்கி அந்த பணத்தை மாற்ற முடியாது எனக் கூறி விட்டது

இதனை அடுத்து பணமதிப்பிழப்பு தெரியாமல் இரு மூதாட்டிகள் சேமித்து வைத்திருந்த ரூபாய் 46 ஆயிரம் பணத்தை வங்கிகள் மாற்ற முடியாது என கூறிய நிலையில் இருவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

இரு மூதாட்டிகள் சேர்த்து வைத்த ரூபாய் 46 ஆயிரம் செல்லாமல் போனாலும் அவர்களுக்கு கிடைத்த இந்த உதவியை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது

From around the web