நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: சென்னை மாணவி பிரியங்கா கைது

மருத்துவ கல்லூரிக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் இந்த நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் செய்த ஆள்மாறாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் முதலில் தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவியான பிரியங்கா என்பவரை
 

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: சென்னை மாணவி பிரியங்கா கைது

மருத்துவ கல்லூரிக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் இந்த நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் செய்த ஆள்மாறாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் முதலில் தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்து மேலும் சில மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவியான பிரியங்கா என்பவரை தேனிக்கு வரவழைத்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் மாணவி பிரியங்கா கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் முதல்முறையாக ஒரு மாணவி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web