பி.எஸ்.என்.எல் மொபைலில் 4ஜி சேவை: மத்திய அரசு அனுமதி

தனியார் தொலைத்தொடர்பு சேவை அனைத்திலும் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் பி.எஸ்.என்.எல் 3ஜி சேவையை வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் வருமானம் இன்றி நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுக்க 4 ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது மேலும் பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து விரைவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்
 

பி.எஸ்.என்.எல் மொபைலில் 4ஜி சேவை: மத்திய அரசு அனுமதி

தனியார் தொலைத்தொடர்பு சேவை அனைத்திலும் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் பி.எஸ்.என்.எல் 3ஜி சேவையை வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் வருமானம் இன்றி நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுக்க 4 ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

மேலும் பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து விரைவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்தகட்டமாக 5ஜி சேவையை வழங்க தீவிரம் காட்டி வருகின்றனர். பி.எஸ்.என்.எல் தனது 4ஜி சேவையை ஆரம்பிக்கும் நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கு சென்றுவிட்டால் மீண்டும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது

From around the web