4 மாவட்டங்களில் கனமழை என எச்சரிக்கை: இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். இதனால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் குமரிக் கடல்
 

4 மாவட்டங்களில் கனமழை என எச்சரிக்கை: இன்னும் 2 நாட்களுக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். இதனால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் குமரிக் கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிடமான மழை இன்னும் ஒருசில நாட்களுக்கு தொடரும் அவர் தெரிவித்தார்.

From around the web