திமுக குறித்து 4 பக்க விளம்பரங்கள்: அதிமுகவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா?

 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் நான்கு பக்க விளம்பரங்களை அதிமுக வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அந்த விளம்பரத்தில் திமுக ஆட்சியின்போது நடந்த அராஜகங்கள், நில முறைகேடுகள் ஊழல்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் ஒவ்வொரு செய்திகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது எடுத்து என்பதும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் ஒரு சில ஆங்கில நாளிதழ்களில் முதல் நான்கு பக்கங்கள் விளம்பரமாக வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

advertisement

லட்சக்கணக்கில் செலவு செய்து செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள் அதிகளவில் பொதுமக்களை சென்று சேர்ந்து உள்ளதாகவும் இதனால் திமுக தரப்பினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது அதிமுகவின் கடைசி ஆயுதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

திமுக இதுநாள்வரை கஷ்டப்பட்டு செய்த பிரச்சாரங்கள் இந்த ஒரே விளம்பரத்தால் அடிபட்டுப் போய் விட்டன என்றும் திமுக ஆட்சியில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் இந்த நான்கு பக்கம் விளம்பரங்களில் இணைக்கப் பட்டுள்ளதால் அதிமுகவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்காகவே இதனை கருதுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web