மாநில அளவில் 3வது இடம்: மதுரை மீனாட்சி கல்லூரி சாதனை

 
meenakshi college

உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி சாதனை செய்து உள்ளது. இதனை அடுத்து அந்த கல்லூரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1998 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலை கழகத்துடன் இணைந்த மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் தற்போது மாநில அளவில் 3-வது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த கல்லூரி செய்த சாதனை குறித்து கல்லூரியின் முதல்வர் வானதி அவர்கள் கூறியபோது ஆசிரியர்களின் திறமை குறித்த அளவுகோலில் 140க்கு 132 மதிப்பெண்களை நாங்கள் பெற்றுள்ளோம் என்றும் இதனை அடுத்து தங்களது ஆசிரியர்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்வதாகவும் ஆசிரியர்கள் பங்களிப்பால் தான் இந்த பரிசு எங்களுக்கு கிடைத்தது என்றும் கூறியுள்ளார் 

தற்போது 15 இளங்கலை, 15 முதுகலை, பிஹெச்டி, எம்பில் பாடத் திட்டங்களை கொண்டு மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web