தமிழகத்தில் 4000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு: நாளை கட்டுப்பாடுகள் அறிவிப்பா?

 
தமிழகத்தில் 4000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு: நாளை கட்டுப்பாடுகள் அறிவிப்பா?

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3986 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 911,110 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1459 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 17 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 12,821 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் தமிழகத்தில் இன்று 1,824 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 870,546 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 79,927 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 198,45,778 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

corona

From around the web