சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 35 பேர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்

கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்தத் தேர்வில்வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த 35 பேர்களும் வெகுதூரத்தில் இருந்து இந்த இரு தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியதாக தெரிகிறது. அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதாமல் இவ்வளவு
 
சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 35 பேர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்

கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்தத் தேர்வில்வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த 35 பேர்களும் வெகுதூரத்தில் இருந்து இந்த இரு தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியதாக தெரிகிறது. அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதாமல் இவ்வளவு தூரம் வந்து தேர்வு எழுத என்ன காரணம்? என்ற சந்தேகமும் எழுந்தது

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் அவர்களிடம் சென்னையில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விசாரணைக்கு பின்னரே தேர்வான 35 பேர் முறைகேடு செய்துள்ளார்களா? என்பது தெரிய வரும் என கூறப்படுகிறது

From around the web