கடலில் தத்தளித்த 32 மீனவர்களை மீட்டது இந்திய கடற்படை

மத்திய அரபிக் கடலில் தத்தளித்த 32 மீனவர்களை இந்திய கடற்படை மீட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் திடீரென கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து தமிழக கேரள அரசுகள் அளித்த தகவலின் பேரில் மீனவர்களை மீட்க உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு இந்திய கடற்படையை அனுப்பியது. தற்போது இந்திய கடற்படை மீனவர்களை மீட்டு கோவா அழைத்துச்சென்றிருப்பதாகவும் விரைவில் அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 

கடலில் தத்தளித்த 32 மீனவர்களை மீட்டது இந்திய கடற்படை

மத்திய அரபிக் கடலில் தத்தளித்த 32 மீனவர்களை இந்திய கடற்படை மீட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் திடீரென கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இதனையடுத்து தமிழக கேரள அரசுகள் அளித்த தகவலின் பேரில் மீனவர்களை மீட்க உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு இந்திய கடற்படையை அனுப்பியது.

தற்போது இந்திய கடற்படை மீனவர்களை மீட்டு கோவா அழைத்துச்சென்றிருப்பதாகவும் விரைவில் அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

முன்னதாக நடுக்கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மத்திய அரசு உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்க உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web