சுர்ஜித்தை காப்பாற்ற ரிஸ்க் எடுக்கும் 3 வீரர்கள்: குவியும் பாராட்டுக்கள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியாக ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது இந்த சுரங்கம் 110 அடிகள் தோண்ட உள்ளதாகவும் இந்த சுரங்கத்தில் 3 தீயணைப்பு படை வீரர்கள் இறங்கி அங்கிருந்து ஆழ்துளைக் கிணற்றுக்கு ஒரு பாதை அமைத்து சுர்ஜித்தை மீட்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது இந்த நிலையில் இந்த
 

சுர்ஜித்தை காப்பாற்ற ரிஸ்க் எடுக்கும் 3 வீரர்கள்: குவியும் பாராட்டுக்கள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியாக ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது

இந்த சுரங்கம் 110 அடிகள் தோண்ட உள்ளதாகவும் இந்த சுரங்கத்தில் 3 தீயணைப்பு படை வீரர்கள் இறங்கி அங்கிருந்து ஆழ்துளைக் கிணற்றுக்கு ஒரு பாதை அமைத்து சுர்ஜித்தை மீட்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இந்த சுரங்கத்திற்குள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இறங்கப் போகும் 3 வீரர்கள் அபிவாணன், கண்ணதாசன் மற்றும் மணிகண்டன் என்று தெரிய வந்துள்ளது

இந்த மூன்று வீரர்களும் தைரியத்துடன் உள்ளே இறங்கி சுர்ஜித்தை மீட்டுவர இணையதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது நாமும் இந்த மூன்று வீரர்களை வாழ்த்தலாமே

From around the web