கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை பலி: அலட்சியத்திற்கு அளவே இல்லையா?

ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது என்பது இந்தியாவில் மிக சுலபமான காரியம். அதனால் தான் இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியை தாண்டியுள்ளது ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான ஒரு விஷயம். பெற்றோர்களின் அலட்சியத்தால் பல குழந்தைகள் தங்களுடைய விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக நேற்று பலியான சுஜித் என்ற 2 வயது குழந்தையை கூறலாம் இந்த நிலையில் சுஜித்தின் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் தற்போது பண்ருட்டி
 

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை பலி: அலட்சியத்திற்கு அளவே இல்லையா?

ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது என்பது இந்தியாவில் மிக சுலபமான காரியம். அதனால் தான் இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியை தாண்டியுள்ளது

ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான ஒரு விஷயம். பெற்றோர்களின் அலட்சியத்தால் பல குழந்தைகள் தங்களுடைய விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக நேற்று பலியான சுஜித் என்ற 2 வயது குழந்தையை கூறலாம்

இந்த நிலையில் சுஜித்தின் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் தற்போது பண்ருட்டி அருகே கழிவுநீர் தொட்டிக்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பன்ருட்டி அருகே மகாராஜன்-பிரியா என்ற தம்பதியின் 3 வயது மகள் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்துள்ளது. அந்த குழியில் மழைநீர் தேங்கி இருந்தால் குழந்தை சகதியில் சிக்கி பலியாகி உள்ளது

இதனை யாரும் சில மணிநேரம் கவனிக்காத நிலையில், மாலையில்தான் குழந்தை கழிவு நீர் தொட்டியில் பிணமாக இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

From around the web