ஒரே கதையை படமாக்கும் 3 இயக்குனர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

ஒரு திரைப்படத்தின் ரிலீஸின்போது திடீரென ஒருவர் அந்த படத்தின் கதை தன்னுடையது என்று வழக்குப்போடும் நிலை கோலிவுட்டில் அடிக்கடி நடந்து வருகிறது இந்த நிலையில் ஒரே கதையை படமாக்கும் 3 இயக்குனர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவர் தனித்தனியாக இயக்கி வருவது தெரிந்ததே இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஜெ.தீபா
 

ஒரே கதையை படமாக்கும் 3 இயக்குனர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

ஒரு திரைப்படத்தின் ரிலீஸின்போது திடீரென ஒருவர் அந்த படத்தின் கதை தன்னுடையது என்று வழக்குப்போடும் நிலை கோலிவுட்டில் அடிக்கடி நடந்து வருகிறது

இந்த நிலையில் ஒரே கதையை படமாக்கும் 3 இயக்குனர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவர் தனித்தனியாக இயக்கி வருவது தெரிந்ததே

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து விரைவில் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web