3 நாட்களுக்கு தொடர் விடுமுறையா? கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த மூன்று நாட்களுக்கும் அதன் பின்னர் நிலைமையை பொருத்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது சற்றுமுன் வெளியான தகவலின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும் இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும்
 

3 நாட்களுக்கு தொடர் விடுமுறையா? கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த மூன்று நாட்களுக்கும் அதன் பின்னர் நிலைமையை பொருத்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சற்றுமுன் வெளியான தகவலின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும் இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இதேபோல் நேற்றிரவு சென்னை அண்ணா சாலை, மெரினா, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. இன்று அதிகாலையும் சென்னையின் பல இடங்களில் கனமழை, மிதமான மழை பெய்துள்ளது. எனவே இன்று மற்றும் நவம்பர் 30 முதல் விடுமுறை அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web