டிசம்பர் 3: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?

கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் இதனை அடுத்து மீட்பு பணியினர் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை இல்லை என்றாலும் தென் மாவட்டங்களில்
 

டிசம்பர் 3: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?

கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்

இதனை அடுத்து மீட்பு பணியினர் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை இல்லை என்றாலும் தென் மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து கனமழை பெய்துவரும் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தனித்தனியே அறிவித்துள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் இம்மூன்று மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web