ரேசனில் 2வது தவணை: இன்று முதல் டோக்கன் விநியோகம்!

 
ration store

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூபாய் 4000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். அதில் ஏற்கனவே முதல் தவணை ரூபாய் 2000 வழங்கப்பட்டு விட்ட நிலையில் இரண்டாவது தவணை வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கும் ரூபாய் 2000 இரண்டாவது தவணைக்கு இன்று முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவார்கள் என்றும் இந்த பணி ஜூன் 14 வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

இதனை அடுத்து ஜூன் 15 முதல் டோக்கன் வழங்கப்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி தமிழக அரசு அறிவித்த 14 வகை பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருள்களுக்கான டோக்கன் வழங்கும் பணிகள் சற்றுமுன் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web