நாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையி அங்கு தீவிரமாக அரசியல் கட்சிகள் வாக்கு சேகரித்து வருகின்றன இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே ஒதுக்குப்புறத்தில் டாஸ்மாக் கடை அருகே பத்து பேர் தங்கியிருந்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வந்தனர். அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது அவர்களில் ஐந்து பேர் மட்டும் சிக்கினர்.
 

நாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையி அங்கு தீவிரமாக அரசியல் கட்சிகள் வாக்கு சேகரித்து வருகின்றன

இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே ஒதுக்குப்புறத்தில் டாஸ்மாக் கடை அருகே பத்து பேர் தங்கியிருந்து திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வந்தனர். அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது அவர்களில் ஐந்து பேர் மட்டும் சிக்கினர். மேலும் இந்த பரபரப்பில் அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.2.78 லட்ச ரூபாய் சாலையில் சிதறியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி , அந்த ஐந்து பேர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

From around the web