கொடைக்கானல் மலையில் மதுவிருந்து: கைதான 250 பேர் யார்? திடுக்கிடும் தகவல்

கொடைக்கானல் மலையில் மது விருந்தில் கலந்து கொண்ட 250 பேர்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளதாக கூறப்படுகிறது கொடைக்கானல் மலையில் குண்டுபட்டி என்ற இடத்தில் 250 பேர் மது விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸ் படை 250 பேர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தது இதுகுறித்து விசாரணை நடந்தபோது தமிழகம் முழுவதும் ஆன்லைனில் நண்பர்களாகி அதன்பிறகு
 
கொடைக்கானல் மலையில் மதுவிருந்து: கைதான 250 பேர் யார்? திடுக்கிடும் தகவல்

கொடைக்கானல் மலையில் மது விருந்தில் கலந்து கொண்ட 250 பேர்களை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளதாக கூறப்படுகிறது

கொடைக்கானல் மலையில் குண்டுபட்டி என்ற இடத்தில் 250 பேர் மது விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸ் படை 250 பேர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தது

இதுகுறித்து விசாரணை நடந்தபோது தமிழகம் முழுவதும் ஆன்லைனில் நண்பர்களாகி அதன்பிறகு ஓரிடத்தில் ஒன்று சேர முடிவு செய்ததாகவும் அதற்காக கொடைக்கானல் குண்டுபட்டி பகுதியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது

இந்த கூட்டத்தில் அனைவரும் மது அருந்துவதற்காக ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் போதைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட 250 பேர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் இவர்களில் ஒரு சிலர் விஐபிகள் என்றும் கூறப்படுகிறது

From around the web