அரசுக்கல்லூரிகளில் 25% அதிகமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் தகவல்!

 
college

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 25 சதவீதம் அதிக மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு நடக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் நேற்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனை கணக்கில் கொண்டு இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 25 சதவீதம் அதிக மாணவர்களை சேர்த்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

அதேபோல் தமிழகத்தில் தற்போது 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் இந்த கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் 150 மாணவர்கள் என்ற கணக்கில் மொத்தம் 1650 புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சட்டசபையில் தெரிவித்தார்.

From around the web