தமிழகத்தில் இன்றும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் 800ஐ தாண்டியது!

 
தமிழகத்தில் இன்றும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் 800ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2194 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,79,463 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 833 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 12,670 பேர் பலியாகியுள்ளனர். 

corona

மேலும் தமிழகத்தில் இன்று 1270 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 853,733 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 84,927 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 190,25,554 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web