நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரம்: தேனி மருத்துவக் கல்லூரி டீனுக்கு மிரட்டல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததை வெளிக்கொண்டு வந்ததால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் சீட் பெற்றதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து உதித் சூர்யாவும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தோண்ட தோண்ட புதுப்புது திடுக்கிடும் விஷயங்கள்
 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரம்: தேனி மருத்துவக் கல்லூரி டீனுக்கு மிரட்டல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததை வெளிக்கொண்டு வந்ததால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் சீட் பெற்றதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து உதித் சூர்யாவும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் தோண்ட தோண்ட புதுப்புது திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். அவருக்கு தேனி காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என தெரிகிறது

From around the web